Monday, March 3, 2014

கரி நாள் என்றால் என்ன?
-----------------------------------------
தமிழ் பஞ்சாங்கங்களில் மட்டும் கரி நாள் என்றொரு விசயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் சௌரமான மாதங்கள் நடைமுறையில் கடைபிடிக்கப்படுகின்றன. இந்தியாவின் மற்ற பகுதிகளில் சந்திரமான மாதங்கள் நடைமுறையில் உள்ளன. சௌரம் என்றால் சூரியன் என்று பொருள். அதாவது சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் மாதங்கள் சௌரமான மாதங்களாகும். தமிழ் மாதங்கள் சௌரமான மாதங்களாகும்
தமிழ் மாதங்களின் ஒரு குறிப்பிட்ட தேதிகள் கரி நாட்களாக தமிழ் பஞ்சாங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.அந்த விவரம் கீழே தரப்பட்டுள்ளன.
சித்திரை - 6,15
வைகாசி – 7,16,17
ஆனி – 1,6
ஆடி – 2,10,20
ஆவணி – 2,9,28
புரட்டாசி – 16,29
ஐப்பசி – 6,20
கார்த்திகை – 1,4,10,17
மார்கழி – 6,9,11
தை – 1,2,3,11,17
மாசி – 15,16,17
பங்குனி – 6,15,19

கரி நாளை ‘மாத தியாஜ்ஜியம்’ என குறிப்பிடுவர். ‘தியாஜ்ஜியம்’ என்றால் ‘விலக்கப்பட வேண்டியது’ என்று பொருள். முகூர்த்த நூல்களில் லக்கின தியாஜ்ஜியம், வார தியாஜ்ஜியம், திதி தியாஜ்ஜியம், நட்சத்திர தியாஜ்ஜியம் என சுப காரியங்களுக்கு விலக்கப்பட வேண்டிய காலங்களை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அதுபோல் கரி நாள் என்பது மாத தியாஜ்ஜியமாகும். இந்த தியாஜ்ஜிய காலங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் எந்த ஒரு ஜோதிட நூல்களிலும் கொடுக்கபடவில்லை.
உதாரணமாக அக்னி நட்சத்திரம் என்பது சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதாகும். அதாவது சூரியன் சில குறிப்பிட்ட பாகைகளில் செல்லும் நாட்கள் அக்னி நட்சத்திர நாட்களாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அந்நாட்களில் சுப காரியங்கள் தவிர்க்கபடுகின்றன. அது போல் கரி நாள் என்பதும் சூரிய சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டதாகும்.
சித்திரை மாதம் முதல் தேதி சூரியன் தன் சஞ்சாரத்தை மேசத்தில் தொடங்குவான். நாளுக்கு ஒரு பாகை வீதம் சூரியன் ராசிகளில் நகர்ந்து செல்வான். சித்திரை 1ல் சூரியன் மேசம் 1 வது பாகையில் இருப்பான், சித்திரை 6ல் சூரியன் மேசம் 6 வது பாகையில் இருப்பான். அதாவது ராசி மண்டலத்தில் சூரியன் நகர்ந்து செல்லும் ஒரு சில பாகைகள் (டிகிரிகள்) அசுபத்தன்மையுடையதாக நம் ரிஷிகள் நிர்ணயித்திருக்கலாம் என்பது என்னுடைய யூகம் மட்டுமே முடிவல்ல.
தை மாதம் முதல் மூன்று நாட்களும் தமிழகத்தில் சூரியனுக்குரிய விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் அந்த மூன்று நாட்களும் கரி நாட்களாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கரி நாட்கள் சூரிய சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டதாகக்கருதலாம். எனவே கரி நாட்கள் என்பதை வெறும் தமிழ் தேதிகளாக கருதாமல், சூரியனின் சஞ்சார பாகைகளாக (டிகிரிகளாக) எடுத்துக்கொள்ளலாம்.
கரி நாட்களைப்போன்றதே தனிய நாட்களாகும். எனவே மேற்கண்ட விளக்கங்கள் தனிய நாட்களுக்கும் பொருந்தும்.
மாந்தி கணிதம்

ஒவ்வொரு நாளும் மாந்தி உதயமாகும் நேரம் கிழமைகளுக்கு தகுந்தவாறும், பகல், இரவு பொழுதுகளுக்கு தகுந்தவாறும் மாறுபடும். அதை கணிப்பது எப்படி என பார்ப்போம்.
பகல் நேர மாந்தி உதய நாழிகையைக்கணிக்க, நடப்பு கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணி வரும் எண்ணை நான்கால் பெருக்கி, பெருக்கி வந்த எண்ணிலிருந்து இரண்டை கழிக்க, அன்றைய கிழமை பகல் நேரத்திற்குரிய மாந்தி உதய நாழிகை கிடைக்கும். உதய நாழிகை என்பது காலை சூரிய உதயத்திலிருந்து கணிக்கப்படுவதாகும்.
எல்லா கிழமைகளுக்கும் பகல் நேர மாந்தி உதய நாழிகையை கணிப்போம். ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 7 வருகிறது, அந்த 7 ஐ 4 ஆல் பெருக்கினால் 7 * 4 = 28, அந்த 28 லிருந்து 2 ஐ கழித்தால் 28 – 2 = 26. எனவே ஞாயிற்றுக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 26 நாழிகைகளாகும்.
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 6 வருகிறது, அந்த 6 ஐ 4 ஆல் பெருக்கினால் 6 * 4 = 24, அந்த 24 லிருந்து 2 ஐ கழித்தால் 24 - 2 = 22.எனவே திங்கள் கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 22 நாழிகைகளாகும்.
செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 5 வருகிறது, அந்த 5 ஐ 4 ஆல் பெருக்கினால் 5 * 4 = 20, அந்த 20 லிருந்து 2 ஐ கழித்தால் 20 - 2 =18.எனவே செவ்வாய்க்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 18 நாழிகைகளாகும்.
புதன் கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 4 வருகிறது, அந்த 4 ஐ 4 ஆல் பெருக்கினால் 4 * 4 = 16, அந்த 16 லிருந்து 2 ஐ கழித்தால் 16 - 2 = 14.எனவே புதன் கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 14 நாழிகைகளாகும்.
வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 3 வருகிறது, அந்த 3 ஐ 4 ஆல் பெருக்கினால் 3 * 4 = 12, அந்த 12 லிருந்து 2 ஐ கழித்தால் 12 - 2 = 10.எனவே வியாழக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 10 நாழிகைகளாகும்.
வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 2 வருகிறது, அந்த 2 ஐ 4 ஆல் பெருக்கினால் 2 * 4 = 8, அந்த 8 லிருந்து 2 ஐ கழித்தால் 8 - 2 = 6.எனவே வெள்ளிக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 6 நாழிகைகளாகும்.
சனிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 1 வருகிறது, அந்த 1 ஐ 4 ஆல் பெருக்கினால் 1 * 4 = 4, அந்த 4 லிருந்து 2 ஐ கழித்தால் 4 - 2 = 2.எனவே சனிக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 2 நாழிகைகளாகும்.
பகல் நேர மாந்தி உதய நாழிகைகள்
ஞாயிற்றுக்கிழமை - 26 நாழிகை
திங்கள்கிழமை - 22 நாழிகை
செவ்வாய்க்கிழமை - 18 நாழிகை
புதன் கிழமை - 14 நாழிகை
வியாழக்கிழமை - 10 நாழிகை
வெள்ளிக்கிழமை - 6 நாழிகை
சனிக்கிழமை - 2 நாழிகை
இரவு நேர மாந்தி உதய நாழிகையைக்கணிக்க, நடப்பு கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணி வரும் எண்ணை நான்கால் பெருக்கி, பெருக்கி வந்த எண்ணிலிருந்து இரண்டை கழிக்க, அன்றைய கிழமை இரவு நேரத்திற்குரிய மாந்தி உதய நாழிகை கிடைக்கும்.
எல்லா கிழமைகளுக்கும் இரவு நேர மாந்தி உதய நாழிகையை கணிப்போம். ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 3 வருகிறது, அந்த 3 ஐ 4 ஆல் பெருக்கினால் 3 * 4 = 12, அந்த 12 லிருந்து 2 ஐ கழித்தால் 12 - 2 = 10. எனவே ஞாயிற்றுக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 10 நாழிகைகளாகும்.
திங்கள்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 2 வருகிறது, அந்த 2 ஐ 4 ஆல் பெருக்கினால் 2 * 4 = 8, அந்த 8 லிருந்து 2 ஐ கழித்தால் 8 - 2 = 6.எனவே திங்கள் கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 6 நாழிகைகளாகும்.
செவ்வாய்க்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 1 வருகிறது, அந்த 1 ஐ 4 ஆல் பெருக்கினால் 1 * 4 = 4, அந்த 4 லிருந்து 2 ஐ கழித்தால் 4 - 2 = 2.எனவே செவ்வாய்க்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 2 நாழிகைகளாகும்.
புதன் கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 7 வருகிறது, அந்த 7 ஐ 4 ஆல் பெருக்கினால் 7 * 4 = 28, அந்த 28 லிருந்து 2 ஐ கழித்தால் 28 - 2 = 26.எனவே புதன் கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 26 நாழிகைகளாகும்.
வியாழக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 6 வருகிறது, அந்த 6 ஐ 4 ஆல் பெருக்கினால் 6 * 4 = 24, அந்த 24 லிருந்து 2 ஐ கழித்தால் 24 - 2 = 22.எனவே வியாழக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 22 நாழிகைகளாகும்.
வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 5 வருகிறது, அந்த 5 ஐ 4 ஆல் பெருக்கினால் 5 * 4 = 20, அந்த 20 லிருந்து 2 ஐ கழித்தால் 20 - 2 = 18.எனவே வெள்ளிக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 18 நாழிகைகளாகும்.
சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 4 வருகிறது, அந்த 4 ஐ 4 ஆல் பெருக்கினால் 4 * 4 = 16, அந்த 16 லிருந்து 2 ஐ கழித்தால் 16 - 2 = 14.எனவே சனிக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 14 நாழிகைகளாகும்.
இரவு நேர மாந்தி உதய நாழிகைகள்
ஞாயிற்றுக்கிழமை - 10 நாழிகை
திங்கள்கிழமை - 6 நாழிகை
செவ்வாய்க்கிழமை - 2 நாழிகை
புதன் கிழமை - 26 நாழிகை
வியாழக்கிழமை - 22 நாழிகை
வெள்ளிக்கிழமை - 18 நாழிகை
சனிக்கிழமை - 14 நாழிகை
மாந்தி ஸ்புடம் கணிக்கும் முறை
மாந்திஸ்புடம் என்பது ஒரு குறிப்பிட்ட தினத்தில் பகல் நேரத்திற்கு ஒன்றாகவும், இரவு நேரத்திற்கு வேறாகவும் இருக்கும்.
1 நாள் = 60 நாழிகை = 360 பாகை
1 பகல் = 30 நாழிகை = 180 பாகை
1 இரவு = 30 நாழிகை = 180 பாகை
பகல் நேர மாந்தி ஸ்புடத்தைக்கணிக்க , பகல் நேர மாந்தி உதய நாழிகையை 180 ஆல் பெருக்கி வரும் தொகையை, 30 ஆல் வகுக்க வரும் தொகையுடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டினால் வருவது பகல் நேர மாந்தி ஸ்புடமாகும்.180 ஐ 30 ஆல் வகுத்தால் வருவது 6 ஆகும். எனவே பகல் நேர மாந்தி உதய நாழிகையை 6 ஆல் பெருக்கி அத்துடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டினால் வருவது பகல் நேர மாந்தி ஸ்புடமாகும்.
பகல் நேர மாந்தி ஸ்புடம் = (பகல் நேர மாந்தி உதய நாழிகை * 6) + (அன்றைய சூரிய ஸ்புடம்)
எல்லா கிழமைகளுக்கும் பகல் நேர மாந்தி ஸ்புடம் கணிப்போம்.
ஞாயிற்றுக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (26 * 6) =156
=156 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
திங்கள்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (22* 6) = 132
=132 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
செவ்வாய்க்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (18*6)= 108 நாழிகை
=108 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
புதன் கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (14*6)= 84
= 84 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
வியாழக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (10*6)= 60
= 60 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
வெள்ளிக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (6*6)=36
= 36 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
சனிக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (2*6) = 12
=12 + (அன்றைய சூரிய ஸ்புடம்)

இரவு நேர மாந்தி ஸ்புடத்தைக்கணிக்க , இரவு நேர மாந்தி உதய நாழிகையை 180 ஆல் பெருக்கி வரும் தொகையை, 30 ஆல் வகுக்க வரும் தொகையுடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டி, அத்துடன் 180 பாகையைக்கூட்டினால் வருவது இரவு நேர மாந்தி ஸ்புடமாகும்.180 ஐ 30 ஆல் வகுத்தால் வருவது 6 ஆகும். எனவே இரவு நேர மாந்தி உதய நாழிகையை 6 ஆல் பெருக்கி வரும் தொகையுடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டி, அத்துடன் 180 பாகையைக்கூட்டினால் வருவது இரவு நேர மாந்தி ஸ்புடமாகும்.
இரவு நேர மாந்தி ஸ்புடம் = (இரவு நேர மாந்தி உதய நாழிகை * 6) + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
எல்லா கிழமைகளுக்கும் இரவு நேர மாந்தி ஸ்புடம் கணிப்போம்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (10 * 6) = 60
= 60 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
திங்கள்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (6* 6) = 36
= 36 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
செவ்வாய்க்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (2*6) = 12 நாழிகை
= 12 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
புதன் கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (26*6) = 156
= 156 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
வியாழக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (22*6) = 132
= 132 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
வெள்ளிக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (18*6) = 108
= 108 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
சனிக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (14*6) = 84
= 84 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
மேற்கண்டவாறு கணித்து வரும் பாகைகள் 360 க்கு மேல் இருந்தால், கணித்து வந்த பாகைகளிலிருந்து 360 பாகைகளை கழிக்க வேண்டும்.