Friday, January 27, 2012

ஆருடம்

ஆருடம்

ஆருடம் என்பது பலன் பார்க்கும் நேரத்திற்குரிய மணி-நிமிடங்களில்,மணியை நீக்கிவிட்டு நிமிடங்களை மட்டும்கொண்டு நிர்ணயிக்கப்படுவதாகும்.ஆருடம் என்பது 5 நிமிட நேரம் கொண்டதாகும்.ஆருடம் கணக்கிட ஒரு கைகடிகாரமோ அல்லது சுவர்கடிகாரமோ இருந்தால் போதும்.ஒருவர் ஆருடம் கேட்கும் சமயத்தில் கடிகாரத்தில் பெரியமுள் எங்கே நிற்கிறதோ அதைக்கொண்டு ஆருடத்தைக்கணித்துக்கொள்ளலாம்.

5 நிமிடம் = 1ஆருடம்
1மணி = 60 நிமிடங்கள் = 12 ஆருடங்கள்

00 முதல் 05 நிமிடங்கள்  வரை- மேசம்
05 முதல் 10 நிமிடங்கள் வரை- ரிசபம்
10 முதல் 15 நிமிடங்கள் வரை- மிதுனம்
15 முதல் 20 நிமிடங்கள் வரை- கடகம்
20 முதல் 25 நிமிடங்கள் வரை- சிம்மம்
25 முதல் 30 நிமிடங்கள் வரை- கன்னி
30 முதல் 35 நிமிடங்கள் வரை- துலாம்
35 முதல் 40 நிமிடங்கள் வரை- விருச்சிகம்
40 முதல் 45 நிமிடங்கள் வரை- தனுசு
45 முதல் 50 நிமிடங்கள் வரை- மகரம்
50 முதல் 55 நிமிடங்கள் வரை- கும்பம்
55 முதல் 60 நிமிடங்கள் வரை- மீனம்




55-60

 00-05   

05-10

10-15      

50-55


15-20

45-50

20-25

 40-45

35-40

30-35

25-30

ஜாமக்கோள் ஆருட முறையில் பலன் கூறுவதற்கு தெரிந்திருக்கவேண்டிய கணிதங்கள்:

ஜாமக்கோள் ஆருட முறையில் பலன் கூறுவதற்கு
தெரிந்திருக்கவேண்டிய கணிதங்கள்:

1.ஆருடம்
2.உதயம்
3.சூரிய வீதி
4.கவிப்பு
5.ஜாமக்கோள் உதயம்
6.கோட்சார கிரகநிலை

ஜாமக்கோள் ஆருட முறையில் பலன் கூறுவதற்கு
தெரிந்திருக்கவேண்டிய அடிப்படை ஜோதிட விசயங்கள்:

1.கிரக காரகம்
2.பாவ காரகம்
3.ராசி காரகம்

Thursday, January 26, 2012

ஜாமக்கோள் உதயம்

ஜாமக்கோள் உதயம்

ஒரு நாள் என்பது 12 மணி நேரம் பகல் பொழுதையும்,12 மணி நேரம் இரவுப்பொழுதையும் கொண்டதாகும்.12 மணி நேரம் கொண்ட பகல் பொழுது 8 ஜாமங்களாகவும்,12 மணி நேரம் கொண்ட இரவுப்பொழுது 8 ஜாமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
8 ஜாமம் = 12 மணி
1 ஜாமம் = 12/8 = 1 1/2 மணி

எனவே ஒரு ஜாமம் என்பது 1 1/2 மணி நேரமாகும்.பகல் பொழுதில் வரும் ஜாமங்கள் சூரிய உதயத்தில் தொடங்கி சூரிய அஸ்தமனத்தில் முடிவடையும்.இரவுப்பொழுதில் வரும் ஜாமங்கள் சூரிய அஸ்தமனத்தில் தொடங்கி சூரிய உதயத்தில் முடிவடையும்.

1ம் ஜாமம்         6 மணி முதல் 7 1/2 மணி வரை
2ம் ஜாமம்    7 1/2 மணி முதல் 9 மணி வரை
3ம் ஜாமம்    9 மணி முதல் 10 1/2மணி வரை
4ம் ஜாமம்    10 1/2 மணி முதல் 12 மணி வரை
5ம் ஜாமம்    12 மணி முதல் 1 1/2 மணி வரை
6ம் ஜாமம்    1 1/2 மணி முதல் 3 மணி வரை
7ம் ஜாமம்    3 மணி முதல் 4 1/2 மணி வரை
8ம் ஜாமம்    4 1/2 மணி முதல் 6 மணி வரை


ஜாமக்கிரகங்கள் உதமாகும் வரிசை முறை கீழ்கண்டவாறு அமையும்.
சூ-செ-குரு-பு-சு-சனி-சந்-ராகு
அந்தந்த கிழமையின் அதிபதி கிரகம் முதலிலும் அதையடுத்து மற்ற கிரகங்களும் வரிசையாக உதயமாகும்.

ஒரு குறிப்பிட்ட கிழமையில் பகல் நேரத்தில் எந்த கிரக வரிசைப்படி ஜாமக்கோள்கள் உதயமாகின்றனவோ அதே வரிசைகிரமத்திலேயே இரவிலும் கிரகங்கள் உதயமாகும்.

ஜாமக்கோள்கள் ராசி கட்டத்தில் அடைக்கப்படும்போது மீனம் முதல் மேசம் வரை வலமிருந்து இடமாக(அதாவது இடஞ்சுழியாக) குறிக்கப்படும்.ராசிகள் 12,ஆனால் ஜாமக்கோள்கள் 8 மட்டுமே எனவே ராசி கட்டத்தில் உள்ள ஸ்திர ராசிகளான ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ஆகிய 4 ராசிகளைத்தவிர்த்து மீதமுள்ள 8 ராசிகளில் மட்டும் ஜாமக்கோள்கள் குறிக்கப்படும்.
உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை 8 ஜாமங்களில் ஜாமக்கோள்கள் உதயமாகும் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.



சூ


ரா



சந்


ஞாயிறு 
1ஆம் ஜாமம்    

சனி


செ


குரு



பு

சு






ரா


சந்



சனி


ஞாயிறு 
2ஆம் ஜாமம்    

சு

சூ


செ


குரு


பு








சந்


சனி


சு

ஞாயிறு
3ஆம் ஜாமம்

பு


ரா



சூ


செ

குரு







சனி

சு


பு


ஞாயிறு 
4ஆம் ஜாமம்    

குரு


சந்



ரா



சூ

செ






சு

பு



குரு


ஞாயிறு
5ஆம் ஜாமம்

செ

சனி



சந்



ரா


சூ






பு


குரு



செ

ஞாயிறு
6ஆம் ஜாமம்

சூ

சு


சனி



சந்


ரா









குரு

செ


சூ


ஞாயிறு 
7ஆம் ஜாமம்    

ரா


பு


சு


சனி


சந்




செ

சூ



ரா


ஞாயிறு 
8ஆம் ஜாமம்    

சந்


குரு



பு


சு

சனி